தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரத்த பரிசோதகருக்கு கலெக்டர் பாராட்டு

 ரத்த பரிசோதகருக்கு கலெக்டர் பாராட்டு

 ரத்த பரிசோதகருக்கு கலெக்டர் பாராட்டு


ADDED : ஜன 16, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிக ரத்தம் பெறுவதற்கு உதவியாக இருந்த பெண் ரத்த பரிசோதகருக்கு கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

கடலுார் தலைமை அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் ரத்த பரிசோதகர் வனிதா சபரீசன். இவர், சமூகத்தால் கைவிடப்பட்ட ஆதரவற்றோருக்கும், புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கும், பெண் குழந்தைகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க உதவுகிறார்.

பெயர், முகவரி தெரியாதவர்கள் இறந்தால், அவர்களது உடலை அடக்கம் செய்வதற்கு உதவியாக உள்ளார். மேலும் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ரத்த தான முகாம் ஏற்பாடு வருகிறார்.

இதனையொட்டி தேசிய ரத்த தான தினத்தன்று நடந்த விழாவில் வனிதா சபரீசனுக்கு, கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், டாக்டர்கள் வினோத்குமார், சிவகாமி ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us