/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பச்சிளம் குழந்தை மூச்சு திணறலால் சாவு டாக்டர்களிடம் கலெக்டர் விசாரணை
/
பச்சிளம் குழந்தை மூச்சு திணறலால் சாவு டாக்டர்களிடம் கலெக்டர் விசாரணை
பச்சிளம் குழந்தை மூச்சு திணறலால் சாவு டாக்டர்களிடம் கலெக்டர் விசாரணை
பச்சிளம் குழந்தை மூச்சு திணறலால் சாவு டாக்டர்களிடம் கலெக்டர் விசாரணை
ADDED : மார் 19, 2025 02:46 AM

கடலுார்:பிறந்த மூன்று நாளில் பச்சிளம் குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார்.
கடலுார் அடுத்த சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி மகன் சூரியபிரகாஷ்,34; கூலி தொழிலாளி. இவரது மனைவி மலர்விழி,30; நிறைமாத கர்ப்பிணியான மலர்விழிக்கு கடந்த 14ம் தேதி பிரசவ வலி ஏற்படவே, நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு மலர்விழிக்கு , குழந்தை பிறப்பில் சிரமம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மலர்விழிக்கு பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை இறந்தது.
ஆத்திரமடைந்த சூரியகுமார் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உரிய சிகிச்சை அளிக்காத நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதன்பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலுார் அரசு மருத்துவமனை மற்றும் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மகப்பேறு பிரிவு டாக்டர்களை நேரில் அழைத்து, குழந்தை இறப்பு குறித்து விசாரணை நடத்தினார்.