/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
/
வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 24, 2024 06:26 AM

கடலுார்: மனைப்பட்டா கேட்டு, அங்குசெட்டிப்பாளையம் மக்கள் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி அடுத்த அங்குச்செட்டிப்பாளையம் காலனி மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க 10 ஆண்டுக்கு முன் அரசு நிலம் கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழங்கு தொடர்ந்தனர். அதில், அரசு கையக்கப்படுத்திய நிலத்தை மக்களுக்கு மனைப் பட்டா வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனை செயல்படுத்த அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் நேற்று, அங்குசெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர், கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்த நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்க கூறினார். அதன்படி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., ராஜசேகரன் நேரில் வந்து இடத்தை ஆய்வு செய்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.