ADDED : மார் 28, 2026 06:44 AM

கடலுார்: கடலுார் செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லுாரியில் காலை நேரக்கல்லுாரி மாணவர்களுக்கான ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அருமைசெல்வம் வரவேற்று கல்லுாரி ஆண்டறிக்கை வாசித்தார்.
பாண்டிச்சேரி பல்கலை தொலைதுாரக்கல்வி மைய இயக்குநர் லாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
விழாவில் பணி நிறைவு பெற்ற பேராசிரியர்கள், விடுதி பணியாளர்கள், 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் உள்தர உறுதிப்படுத்தல் பிரிவில் பணியாற்றிய பேராசிரியர்கள் அனைவரையும் கவுரவ படுத்தினர்.
விழாவில் மூத்த துணைமுதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் சேவியர், கல்லுாரி கல்விப்புல முதன்மையர் அலெக்ஸ், இணை கல்விப்புல முதன்மையர், விளையாட்டு மற்றும் ஊடக மைய இயக்குனர் சார்லஸ் எடிசன், முன்னாள் மாணவ ஒருங்கிணிப்பாளர் மரியஆனந்தராஜ், துணைமுதல்வர்கள் சவரிமுத்து வித்யா, ஜேம்ஸ்மேரி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
