/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் துறையில் கல்லுாரி நாள் விழா
/
வேளாண் துறையில் கல்லுாரி நாள் விழா
ADDED : ஏப் 21, 2025 05:28 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் துறை சார்பில், கல்லுாரி நாள் விழா நடந்தது.
துறை தலைவர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். பேராசிரியர் வெங்கடராமன் வரவேற்றார். மாணவி ஞானஅச்சயா ஆண்டறிக்கை வாசித்தார். கலைப் புல முதல்வர் விஜயராணி வாழ்த்தி பேசினார்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று குடிமைப் பணிகள், வங்கித்துறை மற்றும் கூட்டுறவுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். முன்னாள் மாணவியும், தற்போது மாநில அளவில் குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி கதிர்செல்விக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
உதவி பேராசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

