ADDED : மார் 16, 2026 04:19 AM

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள கீழமூங்கிலடி, ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் பாபு வரவேற்றார். முதல்வர் மாலதி ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில், அண்ணாமலை பல்கலை பதிவாளர் சிங்காரவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 605 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி, பாராட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'இன்றைய போட்டி மிகுந்த உலகில் வெற்றிபெற வேண்டும் என்றால், தொடர் திறன் மேம்பாடு மிகவும் அவசியம்.
மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்க வேண்டும்,' என்றார்.
நிகழ்ச்சியில், நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன், ஆலோசகர்கள் கனகசபை, வரதராஜன், கல்வி நிர்வாகி அசோக் குமார், கல்லுாரி தர மேம்பாடு மற்றும் அங்கீகார ஆலோசகர் தியாகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
