ADDED : மார் 18, 2024 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் :   கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரி முதல்வராக ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர், கிருஷ்ணகிரி, செய்யாறு மற்றும் வேலுார் முத்துரங்கம் அரசு கலைக் கல்லுாரிகளில் வரலாற்றுத் துறை பேராசிரியராகவும், பின்னர் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார்.
2021ம் ஆண்டு முதல் கூடலுார் அரசு கலைக் கல்லுாரியில் துணை முதல்வராக பணிபுரிந்தார். பின், முதல்வராக பதவி உயர்வு பெற்று கடலுார்  அரசு பெரியார் கல்லுாரியில் பொறுப்பேற்றார்.

