ADDED : ஆக 13, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
புவனகிரி: கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புவனகிரி அடுத்த மேலமணக்குடியை சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் கவிபாரதி,19; அரசு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டு வந்த கவிபாரதி நேற்று முன்தினம் மாலை கல்லுாரியில் இருந்து வீட்டிற்கு வந்தவர், சற்று நேரத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் தேடியபோது, அதேபகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கவிபாரதி துாக்கில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
