ADDED : செப் 10, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விஷ ஜந்து தீண்டிய கல்லுாரி மாணவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மங்கலம்பேட்டை அடுத்த எம்.அகரத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அபிஷேக்,21. விழுப்புரம் தனியார் கல்லுாரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த 8ம் தேதி விவசாய நிலத்திற்கு சென்றபோது, விஷ ஜந்து தீண்டியது.
மயங்கி விழுந்த அபிேஷக், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதலுதவி பெற்று, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
