ADDED : நவ 17, 2026 09:37 PM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கருணாகரநல்லுார் தெற்கு தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகள் ஐஸ்வர்யா 19: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பிரிவில், டிப்ளமோ படித்து வந்தார்.
இவர் நேற்று (நவ.,16) இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சோழத்தரம் போலீசார் ஐஸ்வர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
