/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்சில் தவறி விழுந்த கல்லுாரி மாணவர் சாவு
/
பஸ்சில் தவறி விழுந்த கல்லுாரி மாணவர் சாவு
ADDED : மார் 07, 2024 01:25 AM
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் பழனிராஜன், 19; பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சககல்லுாரி மாணவர் இளையராஜா மகன் ஐசக், 19; இருவரும் கடந்த ஜன., 29ம் தேதி காலை புதுச்சத்திரத்திலிருந்து, சிதம்பரம் கல்லுாரிக்கு செல்ல தனியார் பஸ்சில் ஏறினர்.
கொத்தட்டை டோல்கேட் அருகே சென்றபோது, இருவரும் பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
பழனிராஜன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், ஐசக் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ஜிப்மரியில் சிகிச்சை பெற்று வந்த பழனிராஜன் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

