ADDED : ஏப் 11, 2026 10:12 PM
அ நிறம் | அளவு
வடலுார்: மாயமான கல்லுாரி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடலுார், ஆபத்தாரணபுரம், கமலாம்பாள் நகரை சேர்ந்தவர் ராமு மகள் சுவேதா, 19; இவர் வடலுார் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை ராமு வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
