/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
/
கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 31, 2025 04:39 AM

கடலுார்: கடலுார் பெரியார் அரசுக் கல்லுாரியில் மாண வர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையுடன், இணைவு பெற்ற அனைத்து அரசு கல்லுாரிகளிலும் தேர்வுக்கட்டணம், மறுமதிப்பீடு, சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தியதாக கூறி, நேற்று கடலுாரில் தேவனாம்பட்டினம் அரசுக்கல்லுாரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கிளை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பால்ராஜ், இணைசெயலாளர் வெற்றித்தமிழ் முன்னிலை வகித்தனர்.
தேர்வுக்கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

