தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

 கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

 கல்லுாரி மாணவர்கள் போராட்டம்


ADDED : பிப் 21, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் அரசுக் கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் பாடம் நடத்த விரிவுரையாளர்கள் வேண்டும் என கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசுக்கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடலுார் தேவனாம்பட்டினம் அரசுக்கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் காரணமாக, வகுப்புகள் முறையாக நடக்கவில்லை என்பதால் நேற்று கல்லுாரி மாணவர்கள் பாடம் நடத்த விரிவுரையாளர்கள் வேண்டும் எனக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கல்லுாரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us