தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

 கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

 கல்லுாரி மாணவர்கள் போராட்டம்


ADDED : பிப் 26, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வுபெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை 25 லட்சம் ரூபாய் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையொட்டி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us