/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் கல்லுாரி மாணவர்கள் பயிற்சி
/
கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் கல்லுாரி மாணவர்கள் பயிற்சி
கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் கல்லுாரி மாணவர்கள் பயிற்சி
கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் கல்லுாரி மாணவர்கள் பயிற்சி
ADDED : மே 07, 2025 01:32 AM

கடலுார், : விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லுாரி மாணவ, மாணவிகள் கடலுார் அருங்காட்சியகத்தில் இன்டன் ஷிப் பயிற்சி பெற்றனர்.
கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாவட்ட வரலாறு, கலாச்சாரம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், புதைபடிமங்கள் போன்ற பல்வேறு வகையான பழமையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கல்லுாரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு முடிந்த நிலையில், இன்டன்ஷிப் பயிற்சி வகுப்புகள் வரும் 19ம் தேதி வரை நடக்கிறது.
இதனையொட்டி விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லுாரி, தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லுாரி, கே.என்.சி., மகளிர் கல்லுாரி முதுகலை மற்றும் இளங்கலை வரலாறு, ஆங்கிலம் துறை மாணவ, மாணவிகள் 60 பேர் கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் இன்டன்ஷிப் பயிற்சி பெற்றனர்.
அருங்காட்சியகம் உதவி இயக்குனர் ஜெயரத்தினா, அருங்காட்சியகத்தில் உள்ள கலாசாரம் சார்ந்த பழமையான பொருள்கள், மரம், தாவரங்கள், விலங்கினங்கள் குறித்து விளக்கினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாணவ, மாணவிகள் அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்தனர்.