ADDED : ஏப் 27, 2026 05:02 PM

அ நிறம் | அளவு
பெண்ணாடம்:பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், முதுகலை ஆசிரியர் வெள்ளையத்தேவன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வாசுதேவன் வரவேற்றார். 28 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியை பானுமதி ராஜனை ஆசிரியர்கள் பாராட்டி, கவுரவித்தனர்.
அப்போது, பாரதிதாசன் பல்கலை., பெண்ணாடம், திட்டக்குடி தொலைக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் லெனின், முருகன்குடி அரசு பள்ளி ஆசிரியை அன்புச்செல்வி, மின்வாரிய உதவி பொறியாளர் குயிலி, ஆசிரியை அனிதா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை அஞ்சு நன்றி கூறினார்.
