பயிற்சி முடித்த என்.சி.சி., அலுவலருக்கு பாராட்டு
பயிற்சி முடித்த என்.சி.சி., அலுவலருக்கு பாராட்டு
ADDED : ஏப் 13, 2026 11:21 PM

சிதம்பரம்: நாக்பூரில் நடந்த என்.சி.சி., அலுவலர்களுக்கான பயிற்சி முடித்து, திரும்பிய அரசு கல்லுாரி பேராசிரியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அரசு கலை, அறிவியில் கல்லுாரி என்.சி.சி., அலுவலர் சரவணன், நாக்பூரில் நடந்த என்.சி.சி., அலுவலர்களுக்கான, 3 மாத பயிற்சியில் பங்கேற்று கல்லுாரி திரும்பினார். கல்லுாரி வந்த என்.சி.சி., அலுவலர் சரவணனுக்கு, கல்லுாரி முதல்வர் மீனா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துறை தலைவர்கள் சிற்றரசு, தேவநாதன், நடராஜன், செந்தில்குமார், ராமச்சந்திரன், ராஜ்குமார், சுப்புலட்சுமி, சுபாலக்ஷ்மி, யோகலக்ஷ்மி, விஜயமேகநீலவர்மன், அலுவலக பணியாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாலை நடந்த என்.சி.சி., இறுதியாண்டு மாணவர்களுக்கான நிறைவு விழாவில், மாணவர்களுக்க நினைவு பரிசு வழங்கப்பட்டது.
