/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய நீர்தேக்க தொட்டி காரையூரில் இயக்கி வைப்பு
/
புதிய நீர்தேக்க தொட்டி காரையூரில் இயக்கி வைப்பு
ADDED : ஜன 04, 2024 03:50 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த காரையூரில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் மலர்கொடி தலைமை தாங்கினார். அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றிய செயலர் ராஜேந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் காரைச்செழியன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சாமிக்கண்ணு வரவேற்றார். நிர்வாகிகள் ராஜலட்சுமி, ஜெயக்குமார், சுரேஷ், செந்தில், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட கவுன்சிலர் நிதியில் 18 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட போர்வெல்லுடன் கூடிய மேல்நிலை குடிநீர்த் தொட்டியை அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீரை திறந்து வைத்தார்.