/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பல்கலைக் கழகம் சார்பில் சமூகத்தை நாடி நிகழ்ச்சி
/
பல்கலைக் கழகம் சார்பில் சமூகத்தை நாடி நிகழ்ச்சி
ADDED : ஏப் 15, 2025 06:25 AM
சிதம்பரம்;சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சார்பில், சிலுவைபுரம் கிராமத்தில் 'சமூகத்தை நாடி' என்ற நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினர் கடல் வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குனர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். பேராசிரியர் அய்யப்ப ராஜா வரவேற்றார்.
ஆங்கிலத்துறைத் தலைவர் அருள் ஆனந்தன் பேசினார். உளவியல் துறை பேராசிரியர் நீலகண்டன், மனநல ஆலோசனைகள் வழங்கினார்.
கடலுார் அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் செந்தில்முருகன் உடல்நலம் சார்ந்த தகவல்கள் குறித்து பேசினார். தீபம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சக்ரியாஸ் வாழ்த்திப் பேசினார்.
சமூக, பொருளாதார உடல்நலம் சார்ந்த தரவுகள் சேகரித்தல் மற்றும் கல்வி சார்ந்த ஆலோசனைகளை கிராம மக்களுக்கு மாணவர்கள் வழங்கினர்.
பேராசிரியர் பிளாரன்ஸ் நன்றி கூறினார்.