ADDED : பிப் 24, 2026 04:44 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் முதுநகர், குட்டைக்கார தெருவில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
கடலுார் முதுநகர் அடுத்த குட்டைக்கார தெருவில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அய்யப்பன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 33 லட்ச ரூபாய் மதிப்பில புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார்.
மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், துணைமேயர் தாமரைச்செல்வன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதாகுணசேகரன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், பாருக்அலி, சுமதிரங்கநாதன், மகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆதிபெருமாள், பாஸ்கர், ராஜா, மோகன், சூர்யா, பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
