/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.கே.,கல்விக்குழுமத்தில் மாணவர்களுக்கு போட்டி
/
சி.கே.,கல்விக்குழுமத்தில் மாணவர்களுக்கு போட்டி
ADDED : நவ 08, 2024 05:54 AM

கடலுார்: கடலுார் சி.கே.,கல்விக்குழுமம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கிடையே போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
கடலுார் சி.கே.,கல்விக்குழுமம் சார்பில,் ஷாசம் என்ற பெயரில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையே இசை, பாட்டு, நடனம், விளையாட்டு, தனி மற்றும் குழுத்திறமை போட்டிகள் நடத்தப்பட்டது. கடலுார் விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சி.கே., இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அருளாளன், சி.கே.,மெட்ரிக் பள்ளி முதல்வர் திவ்யாமேரி, சி.பி.எஸ்.இ.,பள்ளி முதல்வர் சுதா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் டி.வி.,பிரபலங்கள் அரவிந்த் ஆகாஷ், அருண், மகாலிங்கம், அரவிந்த், சிப்பு, சிப்பி, தனுஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கல்லுாரி பேராசிரியர் அருள்விழி, பாரதி, சிவா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.