நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகன ஓட்டிகள் அவதி
விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், பரங்கிப்பேட்டை அடுத்த கனக்கன்பாளையம் கிராம சாலை செங்குத்தாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
எம். அட்சயராம். பு.முட்லுார்.
தெருவிளக்கு எரியவில்லை
நடுவீரப்பட்டு, அண்ணா நகரில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள், அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
ராமலிங்கம், சி.என்.பாளையம்
நோய் பரவும் அபாயம்
பண்ருட்டி காமராஜர் நகர், வடகைலாசம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு வடிகால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
சுப்ரமணி, பண்ருட்டி.

