தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி....

புகார் பெட்டி....

புகார் பெட்டி....


ADDED : அக் 15, 2024 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்து நெரிசல்

காட்டுமன்னார்கோவில் நகரில் பஸ் நிலையம் ரோடு, செட்டித் தெரு, பெரிய குளம் வளைவு போன்ற பகுதிகளில் போக்குவரத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜசேகர், காட்டுமன்னார்கோவில்.

கொசு தொல்லை அதிகரிப்பு

காட்டுமன்னார்கோவிலில் அதிகரித்து வரும் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், லால்பேட்டை.

பஸ் நிறுத்தப்படுமா

விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் உள்ள செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்ததில் டவுன் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலு, சித்தேரிக்குப்பம்.

தடுப்பணை சீரமைக்கப்படுமா

சிறுபாக்கம் அடுத்த மா.குடிகாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் கட்டப்பட்ட தடுப்பணை பராமரிப்பின்றி கரைகள், மதகுகள் சேதமடைந்துள்ளது.

காளிதாஸ், மா.குடிகாடு.

பயணிகள் கடும் அவதி

விருத்தாசலம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல், திறந்த வெளியில் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

பாஸ்கர், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us