sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புகார் பெட்டி;

/

புகார் பெட்டி;

புகார் பெட்டி;

புகார் பெட்டி;


ADDED : நவ 05, 2024 06:25 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செயல்படாத சிக்னல்

விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் சிக்னல் செயல்படாததால் குழப்பம் ஏற்படுகிறது.

- குமார், பெரியார் நகர்.

சுகாதார சீர்கேடு

விருத்தாசலம் மேட்டுக்காலனியில் சுகாதார வளாகம் பழுதடைந்து துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

- தாமு, மேட்டுக்காலனி.

போக்குவரத்து பாதிப்பு

பு.முட்லுாரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்லும் சாலை அகரம் பகுதியில் சாலையோரம் மணல், ஜல்லி கொட்டுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

-நளமகராஜன், பரங்கிப்பேட்டை.

மாணவர்கள் அவதி

சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்திலிருந்து செல்லும் மேல்நிலைப் பள்ளி சாலையை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-அஜய்வருண் பிரகாஷ், சேத்தியாத்தோப்பு .

ஆபத்தான மின் கம்பம்

புவனகிரி வள்ளலார் கோவில் அருகில் குடியிருப்பு மற்றும் கடைவீதிகள் உள்ள பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மின்துறையினர் நேரில் ஆய்வு செய்து மாற்றி அமைக்க வேண்டும்.

-வர்த்தகர்கள், புவனகிரி.

பலியாகும் குரங்குகள்

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் சாலையோரம் வீசும் உணவுகளை சாப்பிட வரும் குரங்குகளில் வாகனங்களில் சிக்கி பலியாவதை தடுக்க வேண்டும்.

- பிரபாகரன், பெண்ணாடம்.

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் விருத்தாசலம் சாலையோரம் கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

- அன்பு, மங்கலம்பேட்டை.






      Dinamalar
      Follow us