தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : டிச 27, 2024 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 11:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாகன ஓட்டிகள் அவதி

விருத்தாசலம் ஆலடி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

பாபு, ஆலடி ரோடு.

சுகாதார வளாகம் தேவை

புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பஸ் நிறுத்தத்தில், சுகாதார வளாகம் கட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, பெரியப்பட்டு

பெண் பயணிகள் அச்சம்

விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்ட பகுதியில் சமூக விரோத செயல்கள் நடப்பதால் பெண் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

சிவக்குமார், விருத்தாசலம்.

குடிநீர், கழிவு நீர் கசிவால் அபாயம்

கடலுார் ராஜாம்பாள் நகர் இரண்டாவது குறுக்கு தெருவில், பாதாள சாக்கடை கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பு கசிவால் பொதுமக்களுக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

லலிதா, ராஜாம்பாள் நகர்.

சமூக விரோதிகள் அட்காசம்

விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில், சமூக விரோதிகள் சிலர் தினசரி மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்து செல்வதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைகின்றனர்.

செல்வக்குமார், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us