ADDED : செப் 21, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
மணல் அகற்றப்படுமா?
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் இருபுறமும் குவிந்துள்ள மணலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோக், பெ.பொன்னேரி.
அங்கன்வாடி பயன்பாட்டிற்கு வருமா?
பெண்ணாடம், காமராஜர் நகரில் காட்சிப்பொருளான அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டியன், பெண்ணாடம்.
டாடா ஏஸ் வேன் அகற்றப்படுமா?
பெண்ணாடம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு, பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் காய்கறிகள் விற்கும் டாடா ஏஸ் வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபரி, பெண்ணாடம்.
