ADDED : நவ 26, 2026 03:41 PM
அ நிறம் | அளவு
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையில் பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைத்துள்ள தள்ளுவண்டி, பூ கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– செந்தில், பெண்ணாடம்.
மாடுகளால் விபத்து அபாயம்
கடலுார் நகரின் பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சரவணன், மஞ்சக்குப்பம்.
நாய்களை பிடிக்க நடவடிக்கை தேவை?
திட்டக்குடி – பெருமுளை சாலையில் பொது மக்களை துரத்தி கடிக்கும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– வேல்முருகன், திட்டக்குடி.
