UPDATED : ஜூன் 04, 2026 08:14 PM
ADDED : ஜூன் 04, 2026 08:11 PM
வாகன ஓட்டிகள் அச்சம்
பரங்கிப்பேட்டை, ரயில்வே கேட்டில் இருந்து பு.முட்லுார் வரை, நெடுஞ்சாலையில் மின்சார வசதி இல்லாததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
-கார்த்தி, பு.முட்லுார். போக்குவரத்து பாதிப்பு விருத்தாசலம் கடைவீதி நான்குமுனை சந்திப்பில் தினசரி பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரவணன், விருத்தாசலம். காத்திருப்பு கூடம் சீரமைக்கப்படுமா? விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலா,
விருத்தாசலம்.
ஆக்கிரமிப்பால் பயணிகள் சிரமம் வேப்பூர் கூட்டுரோடு மேம்பாலத்தின் கீழேயும், பஸ் நிறுத்தத்திலும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் சிரமமடைகின்றனர்.
-அவினாஷ், வேப்பூர். சேதமடைந்த சாலைகள்: வேப்பூர் அடுத்த ஐவதுகுடி கிராமத்தில் தெருக்கள் தோறும் சிமெண்ட் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
-லட்சுமணன், ஐவதுகுடி. சாலைகளில் மணல் தேக்கம் வேப்பூர் சர்வீஸ் சாலைகளில் புழுதி மணல் தேங்கி கிடப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
-பிரபு, வேப்பூர்.
