UPDATED : ஜூலை 26, 2026 05:02 PM
ADDED : ஜூலை 26, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
ஹைமாஸ் விளக்கு தேவை: பெண்ணாடம் அடுத்த இறையூர் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்த சென்டர் மீடியனில் ஹைமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனசேகரன், பெ.பொன்னேரி.
குடிநீர் வசதி தேவை: பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா, முருகன்குடி.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?: திட்டக்குடி - பெருமுளை சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரவி, குடிக்காடு.
சாலை ஆக்கிரமிப்பு:
விருத்தாசலம் - காட்டுக்கூடலுார் சாலையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.
- கார்த்திகேயன், விருத்தாசலம்.
