UPDATED : ஆக 20, 2026 04:47 PM
ADDED : ஆக 20, 2026 02:40 PM
விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் பள்ளி நேரங்களில் செல்லும் அரசு டவுன் பஸ்கள் நிறுத்தங்களில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும்.
- தனசேகரன், பெ,பொன்னேரி.
வேகத்தடையில் வர்ணம் அடிக்கப்படுமா?
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வேகத்தடையில் வர்ணம் அடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக், திட்டக்குடி.
வேகத்தடை அமைக்க வேண்டும்நடுவீரப்பட்டு நைனார்பேட்டை சாலையில் மருத்துவமனை மற்றும் அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.
பாஸ்கர், நடுவீரப்பட்டு
சாலை ஆக்கிரமிப்பு
கடலுார், புதுப்பாளையம் மெயின்ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.-கமலக்கண்ணன், கடலுார்.
பொதுமக்கள் அவதி
கடலுார் லாரன்ஸ்ரோடு சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தில் ஹாரன் அடிப்பதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். -கிஷார், கடலுார்
ரவுண்டானாவில் விபத்து அபாயம்
விருத்தாசலம் சித்தலுார் ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், நெடுந்துார பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
- முரளி, விருத்தாசலம்.
