UPDATED : செப் 06, 2026 05:32 PM
ADDED : செப் 06, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரவுண்டானாவில் விபத்துகளை தடுக்கும் வகையில் சிக்னல் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனசேகரன், பெ.பொன்னேரி. பயணிகள் அவதி விருத்தாசலம் பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
- பாக்யராஜ், விருத்தாசலம். தெருவிளக்கு அமைக்கப்படுமா?
பெண்ணாடம் பேரூராட்சி, பெ.கொல்லத்தங்குறிச்சி சாலையில் தெருவிளக்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விக்கி, பெண்ணாடம். பூட்டிக்கிடக்கும் நுாலகம்
பெண்ணாடம் பேரூராட்சி, சோழன்நகரில் பூட்டிக்கிடக்கும் நுாலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சங்கர், பெண்ணாடம்.
