/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முக்கிய சாலைகள் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கூட்டத்தில் புகார்
/
முக்கிய சாலைகள் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கூட்டத்தில் புகார்
முக்கிய சாலைகள் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கூட்டத்தில் புகார்
முக்கிய சாலைகள் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கூட்டத்தில் புகார்
ADDED : அக் 26, 2024 06:47 AM

கடலுார்: கடலுார் மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். ஆணையர் அனு, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது.
நடராஜன் (தி.மு.க): மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை குறைக்க வேண்டும். கடலுார் மாநகரில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் என தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை.
கீதா குணசேகரன் (தி.மு.க): கடலுார் மாநகரில் 24 மணி நேரமும் குடிநீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரகாஷ் (தி.மு.க): எங்கள் பகுதியில் முழுமையான வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்.
கண்ணன் (த.வா.க); எங்கள் பகுதியான கே.கே.நகரில் மின் விளக்குகளை சீரமைத்து தர வேண்டும்.
மேயர் சுந்தரி ராஜா: கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.