/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெசவாளர்களுக்கு பாரபட்சமாக ஊக்கத்தொகை வழங்குவதாக புகார்
/
நெசவாளர்களுக்கு பாரபட்சமாக ஊக்கத்தொகை வழங்குவதாக புகார்
நெசவாளர்களுக்கு பாரபட்சமாக ஊக்கத்தொகை வழங்குவதாக புகார்
நெசவாளர்களுக்கு பாரபட்சமாக ஊக்கத்தொகை வழங்குவதாக புகார்
ADDED : நவ 13, 2024 09:06 PM
நடுவீரப்பட்டு ; கடலுார் மாவட்ட நெசவாளர்களுக்கு, ஊக்கத்தொகையை, பாரபட்சமின்றி வழங்க, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கைத்தறி நெசவு மற்றும் பாவுபட்டறை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி கடலுார் கைத்தறி உதவி இயக்குனருக்கு கொடுத்துள்ள கடித்தத்தில் கூறியிருப்பதாவது:
குடியாத்தம் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் 60க்கு 40 ரக கைலிகளுக்கு, ரூ.45 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
இதே ரகத்திற்கு கடலுார் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.31.25 மட்டுமே வழங்கப்படுகிறது.
ஒரே ரகம் உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை நீக்கி, கடலுார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கும் ரூ. 45 ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.