/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழைநீர் வடிகால் பணி கமிஷனரிடம் புகார் மனு
/
மழைநீர் வடிகால் பணி கமிஷனரிடம் புகார் மனு
ADDED : ஜன 10, 2025 06:29 AM
கடலுார்: கடலுார் மாநகராட்சி 24 வது வார்டில், கிடப்பில் உள்ள மழைநீர் வடிகால் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் கமிஷனரிடம் மனு அளித்தனர்.
கடலுார் மாநகராட்சி கமிஷனர் அனுவிடம், கவுன்சிலர் சரவணன தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு:
கடலுார் மாநகராட்சி 24 வது வார்டு தங்கராஜ் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க 64 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு பணி துவக்கப்பட்டது. அதில் 60 சதவீதம் பணி மட்டுமே முடிவு பெற்று மீதமுள்ள பணி நடக்காமல் உள்ளது. மேலும், நடைபெற்ற பணியில் பல இடங்களில் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் உடனடியாக பணிகளை துவங்கி முடிக்க கமிஷனர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

