/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
/
உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : நவ 01, 2024 06:13 AM

கடலுார்: உணவு பாதுகாப்புத்துறையில் பணியாற்றி நேற்றுடன் ஓய்வு பெறும் நல்லத்தம்பிக்கு பாராட்டு விழா கடலுாரில் நடந்தது.
பொது சுகாதாரத் துறையில் 22 ஆண்டுகள், உணவு பாதுகாப்பு துறையில் 13 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிவர்.
உணவு பாதுகாப்புத் துறை என்பது பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் உயிர்களை காப்பாற்றக் கூடியது. உடல் நலத்தை பாதுகாக்க கூடியது. மக்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும் என்பதுதான் உணவு பாதுகாப்பு சட்டத்தின் இலக்கு. அந்த இலக்கை நோக்கி துறை சென்று கொண்டிருக்கிறது. அந்த துறையில் நான் பணியாற்றியதை பெருமையாக கருதுவதாக தெரிவித்த நல்லத்தம்பி நேற்றுடன் தனது பணிக்காலத்தை நிறைவு செய்தார்.
நல்லத்தம்பிக்கும், அவரது துணைவியாருக்கும், சக ஊழியர்கள், நண்பர்கள், முன்னாள் அலுவலக பணியாளர்கள் பாராட்டி வாழ்த்தினர்.