ADDED : ஏப் 27, 2026 10:21 PM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: பணி நிறைவு பெற்ற கம்மாபுரம் வட்டார கல்வி அலுவலர் செல்வி ராஜாகோபாலுக்கு பாராட்டு விழா நடந்தது.
நெய்வேலி அடுத்த வேப்பங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், கலைசெல்வி, ராஜேஸ்வரி, மன்னர்மன்னன், ஞானவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்மாபுரம் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி ஒய்வு பெற்ற செல்வி ராஜாகோபாலின் கல்வி சேவையை பாராட்டி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராம் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன், கம்மாபுரம் வட்டார தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், மேலான்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
