ADDED : செப் 04, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலக ஓட்டுநர் கோபாலகிருஷ்ணனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடந்த விழாவில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ராஜமுத்து, கூட்டுறவு ஒன்றிய பிரசார அலுவலர் சித்திவிளாகம், மேலாளர் முருகையன் முன்னிலை வகித்தனர்.
இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் ராஜன், பாலகிருஷ்ணன், துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் திருமூர்த்தி, எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் நாகலட்சுமி ஆகியோர் கோபாலகிருஷ்ணனுக்கு பணி நிறைவு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினர்.
விழாவில், பணியாளர் சங்க செயலாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
