/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கிலிருந்து விழுந்து வேனில் சிக்கிய கணினி பயிற்சியாளர் பலி
/
பைக்கிலிருந்து விழுந்து வேனில் சிக்கிய கணினி பயிற்சியாளர் பலி
பைக்கிலிருந்து விழுந்து வேனில் சிக்கிய கணினி பயிற்சியாளர் பலி
பைக்கிலிருந்து விழுந்து வேனில் சிக்கிய கணினி பயிற்சியாளர் பலி
ADDED : நவ 05, 2024 06:17 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் பைக்குகள் மோதியதில், விழுந்தவர் மீது வேன் மோதி தற்காலிக ஆசிரியர் இறந்தார்.
நெல்லிக்குப்பம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் மகன் ராக்லெனின், 43; இவர், நெல்லிக்குப்பத்தில் உள்ள அண்ணாகிராம வட்டார வளமையத்தில் தற்காலிக கணினி பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு 10:15 மணியளவில் தனது டி.வி.எஸ்.ஸ்டார் ஸ்போர்ஸ் பைக்கில் கடலுாரில் இருந்து நெல்லிக்குப்பம் வந்து கொண்டிருந்தார்.
சார் பதிவாளர் அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே கடலுார் நோக்கிச் சென்ற குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்த பழனிசாமி மகன் கோகுல், 22; ஓட்டிச் சென்ற யமாகா பைக் மோதியது.
இதில் ராக்லெனின் சாலையில் விழுந்தார். அப்போது கடலுாரில் இருந்து நெல்லிக் குப்பம் வந்த வேன் ராக்லெனின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.