/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் கணினி பயிற்சி துவக்கம்
/
சிதம்பரத்தில் கணினி பயிற்சி துவக்கம்
ADDED : ஜன 11, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பழங்குடி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவிகளுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சி துவக்க விழா நடந்தது.
கணினி மற்றும் தகவல் அறிவியல் துறையில் நடந்த விழாவிற்கு, துறை தலைவர் அரவிந்த் பாபு வரவேற்றார். புல முதல்வர் ஸ்ரீராம் தொடக்க உரையாற்றினார். புல முதல்வர்கள் விஜயராணி, குலசேகரப் பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திட்ட முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார். அமைப்பு செயலாளர்கள் பிரவீனா, சாய்லீலா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

