ADDED : ஆக 16, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: வாலிபர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர், 36.
இவர் கடந்த 14ம் தேதி நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே சென்றபோது, தனது மனைவியை மொபைல்போனில் ஆபாசமாக பேசி சென்றார். அப்போது, அவரது பின்னால் டாடா ஏஸ் வாகனத்தில் வந்த எருமனுார் கிராமத்தை சேர்ந்த பூமாலை, 36; என்பவர் தன்னை திட்டுவதாக நினைத்து, சுதாகரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதில், இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த பூமாலை, சுதாகரை அசிங்கமாக திட்டி தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் பூமாலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
