/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிராது கட்டிய அமைச்சர் உடன்பிறப்புகள் குழப்பம்
/
பிராது கட்டிய அமைச்சர் உடன்பிறப்புகள் குழப்பம்
ADDED : ஏப் 23, 2025 05:37 AM

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பிராது கட்டி வேண்டினால், 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டி, அவரது மனைவி துர்கா பிராது கட்டி, வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெ., பெங்களூரு சிறையில் இருந்த போது, மாஜி அமைச்சர் கோகுலஇந்திரா பிராது கட்டியதும், இரண்டாவது நாளில் ஜாமின் கிடைத்தது.
இதுபோல் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் என பலரும் பிராது கட்டி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 20ம் தேதி ராஜ கோபுரங்களுக்கு நடந்த பூமி பூஜை துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் கணேசன், திடீரென பிராது கட்டி, சுவாமி 'வேலை' கட்டிப்பிடித்து, மனமுருகி வேண்டினார்.
எதுவும் தெரியாமல் விழித்த தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் அவருடன் குழப்பத்திலேயே கோவிலை சுற்றி வந்தனர். கட்சியிலும், ஆட்சியிலும் அவப்பெயர் இல்லாத நிலையில், அமைச்சர் கணேசன் திடீரென பிராது கட்டியது, உடன்பிறப்புகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

