/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., மாஜி தலைவர் பிறந்தநாள் விழா
/
காங்., மாஜி தலைவர் பிறந்தநாள் விழா
ADDED : அக் 24, 2024 07:02 AM

புவனகிரி: தமிழ்நாடு காங்., முன்னாள் தலைவர் அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு சேத்தியாத்தோப்பு தீப்பாஞ்ச நாச்சியார் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவகாமசுந்தரி சாம்பமூர்த்தி தலைமை தாங்கினார். தொடர்ந்து தேவன்குடியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யு., மாவட்டத் தலைவர் சாம்பமூர்த்தி வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் இமையராஜ், மாவட்ட துணைத் தலைவர் தங்கசீத்தாராமன், மாவட்ட செயலாளர் மணிவாசகன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் சித்தார்தன், சேரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில்வேலன், முன்னாள் துணைச் சேர்மன் ராம்குமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, தென்னங்கன்று, வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகரத் தலைவர் மதியழகன், நகரத் துணைத் தலைவர் முனியய்யா, எஸ்.சி., எஸ்.டி., மாவட்ட தலைவர் பாலையா, மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், வட்டார துணைத் தலைவர் கோபிநாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மணிவாசகன் நன்றி கூறினார்.