ADDED : பிப் 01, 2024 11:57 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு கே.பி.டி., திருமண மகாலில், தேவன்குடி ஊராட்சி தலைவர், காங்., பிரமுகர் சாம்பமூர்த்தி இல்லத்திருமண விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த தேவன்குடி புதுப்பேட்டையை சேர்ந்த ஊராட்சி தலைவர் சாம்பமூர்த்தி- சிவகாமசுந்தரி தம்பதியர் மகன் சதீஷ், காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூர் முத்துக்குமார்- பழனியம்மாள் தம்பதியர் மகள் திலகா திருமண விழா நடந்தது. காங்., மாநில தலைவர் அழகிரி தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார்.
மாவட்ட துணைத்தலைவர் திருமாவளவன், மாவட்டபொருளாளர் வேங்கடகிரி, வட்டார தலைவர்கள் பழனிவேல், வைத்தியநாதசாமி, செழியன், மாநிலபொதுக்குழு உறுப்பினர் இமயராஜ், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் சவுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் அசோகன், இளைஞர் காங்., அன்பரசன் முன்னிலை வகித்தனர்.
தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் வரவேற்றார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநிலபொதுச்செயலாளர்கள் பாஸ்கர், சேரன், மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், மாநில செயலாளர் சித்தார்த்தன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாநில செயலாளர் பாஸ்கர், தரணிபாய், மாவட்ட தலைவர் திலகர், மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், முதுகலை ஆசிரியர் சங்க தலைவர் மணிவாசகன், ரங்கமணி, ஜெய்கணேஷ், ஜோதிமணி, இளங்கீரன், நகர்பெரியசாமி, ராமராஜன், குமார், ராமச்சந்திரன், ஜெமினி ராதா, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் நல்லுசாமி , முன்னாள் எம்.பி., முருகேசன் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.
