/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆசிய அளவிலான போட்டியில் வெற்றி முன்னாள் மாணவருக்கு பாராட்டு
/
ஆசிய அளவிலான போட்டியில் வெற்றி முன்னாள் மாணவருக்கு பாராட்டு
ஆசிய அளவிலான போட்டியில் வெற்றி முன்னாள் மாணவருக்கு பாராட்டு
ஆசிய அளவிலான போட்டியில் வெற்றி முன்னாள் மாணவருக்கு பாராட்டு
ADDED : ஏப் 24, 2025 07:04 AM

சிதம்பரம்; ஆசிய அளவிலான கூடைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளியின்முன்னாள் மாணவன் விஜயகுமார், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடி, தேசிய அளவிலான போட்டியில் விளையாடினார்.
அதனை தொடர்ந்து ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்று, இந்திய அளவிலான குழுவில் இணைந்து விளையாடினார். ஆசிய அளவிலான போட்டியில், இந்திய அணி தங்கம் வென்றது. அதனை தொடர்ந்து, முஸ்தபா பள்ளியில், நடந்த பாராட்டு விழாவில், முன்னாள் மாணவன் விஜயகுமாருக்கு, பள்ளி தாளாளர் அன்வர்அலி பொன்னாடை போத்தி, பரிசு வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.