/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'நீட்' தேர்வில் தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு
/
'நீட்' தேர்வில் தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 26, 2025 05:05 AM

பண்ருட்டி: பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5 மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இதில், மாணவர் சந்தோஷ்ராஜ் 720க்கு 546 மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தார்.
மாணவி தனலட்சுமி 516 மதிப்பெண் பெற்று துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரியிலும், மாணவர் புவனேஸ்வரன் 506 மதிப்பெண், மாணவி ரம்யா 500 மதிப்பெண் பெற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரியிலும், மாணவி தர்ஷினி 500 மதிப்பெண் பெற்று நீலகிரி அரசு மருத்துவக் கல்லுாரி யிலும் சேர்ந்தனர்.
இவர்களுக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், தாளாளர் வீரதாஸ் பரிசு வழங்கினார்.
விழாவில், மூத்த முதல்வர் வாலண்டினா லெஸ்லி, இணை செயலாளர் நித்தின் ஜோஷ்வா, முதல்வர் மணிகண்டன், தலைமை ஆசிரியர் கனகராஜன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.