/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 10, 2024 06:48 AM

கடலுார் : தமிழக முதல்வரின் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கிலும், உயர்கல்வி பயில்வதற்குத் தயார்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த 6 ம் தேதி வெளியிடப்பட்டது. கடலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி மானிஷா மாநில அளவில் இத்தேர்வில் முதலிடம் பிடித்தார். மேலும், 26 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் இளநிலை பட்டப்படிப்பு நிறைவுபெறும் வரை மாதம் 1000 ரூபாய் வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். தேர்வில் வெற்றிபெற்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.