/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு
/
பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு
ADDED : நவ 13, 2024 09:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு; தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 2024-25ஆண்டிற்கான பாரதியார், குடியரசு தினத்திற்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நெய்வேலி என்.எல்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் பங்கேற்ற சேத்தியாத்தோப்பு வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் ஆடம்ஸ்பெனி வில்பர், ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
மாணவரை பள்ளி தாளாளர் அகஸ்டின், தலைமை ஆசிரியர் தேவராஜன் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் டேவிட்பெர்னாண்டஸ், ஆசிரியர் செல்வராசு பாராட்டினர்.

