/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
/
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 18, 2025 11:42 PM

நடுவீரப்பட்டு; பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை சரவணன் மகள் சரண்யா, சிலம்பிநாதன்பேட்டை முருகன் மகன் ராஜபிரபு ஆகியோர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கு பத்திரக்கோட்டை அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் காண்டீபன் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் வைத்தியநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் லோகநாதன், முருகன் முன்னிலை வகித்தனர்.
புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் சம்பத், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சொரத்துார் ராஜேந்திரன், சிவசுப்பரமணியன், வடக்குத்து முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெகன், புள்ளியியல் துறை துணை இயக்குனர் கனகேஸ்வரி, பண்ருட்டி வள்ளிவிலாஸ் உரிமையாளர் சரவணன் வாழ்த்திப் பேசினர்.
வி.ஏ.ஓ., சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.