ADDED : பிப் 27, 2026 05:11 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் கனகசபை நகரில், 1.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்தாண்டு அறிவுசார் மையம் துவங்கப்பட்டது.
இந்த மையத்தில் பயின்ற சிதம்பரத்தை சேர்ந்த சினேகா, ரஞ்சித், ஆதித்யன் ஆகியோர் சமீபத்தில், நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று வி.ஏ.ஓ., உள்ளிட்ட அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்ப்பட்ட மூவருக்கும், சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த பாராட்டு விழாவில், சேர்மன் செந்தில்குமார், பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில், நகராட்சி கமிஷனர் மல்லிகா, கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், மணிகண்டன், மக்கின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
